முதல் வணக்கம்
பிறந்தவுடன் தாய் அமுதாய் நாவில் விழுந்தவள்,
வளரும் பருவம் அனைத்திலும் வாழ்வின் அங்கமானால்,
உலகை உணர ஊடகமாய் உதவியவள்,
உணர்வுகளை உரைத்திட உச்சரிப்பில் நின்றவள்,
வியப்பிற்குரிய அவள் வல்லினமோ விண்ணழகு!
அதை வர்ணிக்க அவளிடமே வார்த்தை கடன் வாங்கவேண்டும்,
ஈடினையில்லா இடையினமோ ஏக அழகு!
எங்கு பார்த்தாலும் இதயத்தில் நின்றுவிடும்.
மெய்யுறுகச் செய்யும் மெல்லினமோ மோக அழகு!
மனதை மயக்கும் கவிகளின் மூலாதாரமது.
அவளது உயிரும் மெய்யும் சேர்ந்தாற்றும் தொண்டோ!
செவிகளுக்குள் சேர்த்திடும் சந்திரனின் குளிர்ச்சியை,
மனதினில் கலந்திடும் மதுவின் மயக்கத்தை,
வாழ்க்கையை வெறுத்து வேதனையில் உள்ளோருக்கு
ஆறுதல் அன்னையவள்..
துன்பத்தில் துவண்டு தற்கொலைக்கு போனவனையும்
ஊக்கமடைய செய்து உயிர் வாழ செய்துவிடுவாள்,
அவ்வளவு வலிமை அவளது ஒவ்வொரு சொல்லுக்கும்
சிந்தனைக்காரனுக்கு செல்வமாக சேர்ந்திடுவாள்,
பேச்சாளன்னுகோ பேருதவி புரிந்திடுவாள்
இப்படி அவள் புகழ் பாட ஆரம்பித்தால் முடிவு இல்லை முடிவிலிதான்.
அவள் மொழிப்பூக்கள் பரித்து, கவிமாலைக் கோர்த்து
I am just speechless after seeing this writing, way to go gal it's fantastic.. bring out all your talents.. keep rocking..🤗✌️
ReplyDeleteThank you for your encouraging words..
DeleteBeautiful tamil lines , your create is very beautiful. Please continue akka
ReplyDeleteThank you :)
Delete